Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, July 20

Pages

Breaking News

வேலணை பிரதேச சபை தமிழரசிடம்


வேலணை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமர் தெரிவாகியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும், பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 20 ஆசனங்களை கொண்ட வேலணை பிரதேச சபையில் இம்முறை தேர்தல் ஆசன விசேட பகிர்வின் மூலம் 2 ஆசனங்கள் கூடுதலாக வழங்கப்பட்டதன் அடிப்படையில் 22 உறுப்பினர்கள் உள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சி 3 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்களையும் தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மூன்று சுயேச்சைக் குழுக்கள் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமார் முன்மொழியப்பட்ட நிலையில் வேறு நபர்களின் பெயர்கள் முன் மொழியப்படாதால் அவர் போட்டியின்றி தெரிவானார். அதனை தொடர்ந்து  உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன் தெரிவானார்.

அதேவேளை சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தவிசாளர் தெரிவின் போது வெளிநடப்பு செய்தார்.

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில்

விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

யாழில் தவிசாளர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்...

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்

யாழில் கையெழுத்து போராட்டம்

வவுனியா - கூமாங்குளம் வன்முறை சம்பவம்: இதுவரையில் 07 பேர் கை...

ரணில் - ராஜபக்ஷ தரப்பு கொலை குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்...

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்...

யாழுக்கு விஜயம் செய்த சபாநாயகர்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை