Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, July 15

Pages

Breaking News

செம்பியன்பற்றில் மீனவர்கள் வாடிக்கு தீ வைப்பு


யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்கள் மத்தியில் இடம்பெற்ற முறுகலை தொடர்ந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

செம்பியன்பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தவர்களை  அகற்றும் செயற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது மீனவர்களுக்கிடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து, செம்பியன்பற்று பகுதியில் உள்ள கரைவலை  வாடி ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு லட்சம் பெருமதியான கடல் தொழில் உபகரணங்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.