Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி இராஜேஸ்வரி அம்மனிடம் சுதந்திரமாக செல்ல கொழும்பில் இருந்து அனுமதி தேவையாம்


வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதியளிக்கப்படும். 

குறித்த ஆலயத்திற்கு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தேன். அது நல்லெண்ண சமிக்ஞையாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதனூடாக அதை கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கும் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இராணுவத்திடம் கேட்ட போது, உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து எழுத்து மூலம் அனுமதி வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்து மூலமாக ஆவணம் கிடைத்ததும் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படும் - என மேலும் தெரிவித்தார்.

No comments