Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . பல்கலை முன்றலில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற அறிவுறுத்தல்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றுதல் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

அதன் பிரகாரம் குறித்த நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அகற்றுமாறும் அதனை மீறி வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமை சபையினால் கையகப்படுத்தப்படும்.

அத்துடன் குறித்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு இடையூராக இருக்கின்ற அத்தனை விடயங்களையும் அகற்றுவதோடு நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் - என்றுள்ளது.

No comments