சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன், ஒன்பது மாதங்களின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் பிணை விண்ணப்பத்தினை அடுத்து , பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
மாவனெல்லயைச் சேர்ந்த முஹம்மது சுஹைல், 2024 ஆண்டு அக்டோபர் மாதம் தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டார். தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்,
இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் இன்ஸ்டகிராம் பதிவின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், சிறிது நேரத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம், தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இவருக்கு எதிராக ‘எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை’ என்பதால் பிணை வழங்குவதில் ‘எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
No comments