மாரவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதுடன் , சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்
மாரவில பகுதியில் உள்ள தங்களது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த இருவர் மீதும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதி சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , 10 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளான்.
காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments