செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது.
அதன் போது, புதைகுழிக்கு அருகில் உள்ள பகுதியை துப்பரவு செய்து மண் அகழ்ந்து புதைகுழிக்கு அருகில் மண் மேடு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை அப்பகுதிகளில் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , மண் அகலும் பணிகள் நிறுத்தப்பட்டு , அவ்விடத்தில் புதைகுழி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழிகளுக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் , யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் மண்டையோடு ஒன்றும் , ஆடையை ஒத்த துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 47 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 44 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
No comments