தனக்கு தெரியாமல் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துவிட்டார்கள் என தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் வணக்க நிகழ்வுக்கு வர முடியாது என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருமான ஜெயந்தன் நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வணக்க நிகழ்வு சங்கானை கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
குறித்த நிகழ்வை தந்தை செல்வா நற்பணி மன்றமும் மாவை சேனாதிராஜாவின் வட்டுக்கோட்டை பிரதேச ஆதரவாளர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
குறித்த நிகழ்வு தொடர்பான அழைப்பிதழை வழங்குவதற்காக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெயந்தனிடம் சென்றுள்ளனர்.
யாரை கேட்டு எனக்கு தெரியாமல் எனது தொகுதியில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்தீர்கள்.எனது தொகுதியில் எந்த நிகழ்வு செய்வதாயினும் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என ஏற்பாட்டாளர்களுடன் தவிசாளர் ஜெயந்தன் கடிந்துள்ளார்.
மறைந்த கட்சி தலைவருக்கு அஞ்சலி செலுத்தவும் தவிசாளரிடம் அனுமதி கேட்க வேண்டுமா என ஏற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அண்மையில் வட்டுக்கோட்டை தொகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை சந்தித்து பேசிய பிரதேச சபையின் சக உறுப்பினர்களிடம் தவிசாளர் எரிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments