மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கலொக் கணநாதன் உஷாந்தனால் மக்கள் பணம் மக்களுக்கே என்னும் செயற்திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதி என்ற பதவிநிலை மூலம் கிடைக்கும் கொடுப்பனவு, வரப்பிரசாதம் எவற்றையும் பயன்படுத்த போவதில்லை என்ற தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அவற்றை மக்களுக்கு மீள வழங்குவதே இத் திட்டமாகும்.
அந்த வகையில் பிரதேச சபை முதல் மாதக் கொடுப்பனவுடன் தன் சொந்த பணத்தையும் சேர்த்து கட்டுடை விநாயகர் முன்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த முன்பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி இவை வழங்கி வைக்கப்பட்டது.
No comments