செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 14ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட 23 நாட்களில் அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இன்றைய தினம் 04 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 54 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் கடந்த 14 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , சில நாட்கள் இடைவெளிகளின் பின்னர் மீள பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தொடர்ச்சியாக 15 நாட்கள் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையாலே சிறு இடைவெளியின் அகழ்வு பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
No comments