நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டட திறப்புவிழா இன்றைய தினம் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஸ்ரீபவானந்தராசா ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை குறித்த கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த 10ஆம் திகதி சமய நிகழ்வுகள் இடம்பெற்றது. அதில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குருக்கள் , நாகதீப விகாரை விகாராதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments