யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.யாழ் பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் ஜூலை 12ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இதழ் வெளியீடு நடைபெறவுள்ளது .
இந் நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்கே பிரதம விருந்தினராகவும்
யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலரும் இதன்போது பங்கேற்கவுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நீதம் இதழ் வெளியிடப்பட்டு வருவதுடன் இம்முறை ஒன்பதாவது தடவையாக வெளியிடப்படவுள்ளது.
No comments