யாழ்ப்பாண அண்மித்த பகுதியில் இந்திய துணைத்தூதரகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகி கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வாகனம் விபத்துக்குள்ளான வேளை வாகனத்தில் சாரதி மாத்திரமே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ் . நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பயணித்த இந்திய துணை தூதரகத்திற்கு சொந்தமான வாகனத்துடன் , நல்லூர் - ஓட்டுமட வீதியால் வந்த கார் கந்தர்மட சந்தியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வாகன சாரதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இரு வாகனங்களும் கடுமையான சேதமடைந்துள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments