மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக மானிப்பாய் சந்தியில் இருந்து இராஜகாரியர் வீதி முழுமையாக பிரதேச சபை நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
200 மீற்றர் முழுமையாகவும் 400 மீற்றர் பகுதி அளவிலும் மொத்தமாக 600 மீற்றர் நீளமான வீதி வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்குரிய ஆரம்ப நிகழ்வு பிரதேசசபை தவிசாளர், பொதுமக்கள் பங்களிப்புடன் வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் போது பிரதேச சபை உறுப்பினர் உஷாந்தன், கடந்த தேர்தலில் பெருமளவு மதுபானம், பணம் ஆகியவை வழங்கப்பட்டாலும் மக்கள் அவை எல்லாவற்றையும் தாண்டி எமக்கு வாக்களித்தார்கள்.
அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. அதன் பிரதிபலன்களை இப்போது மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார்கள். தொடர்ந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
No comments