Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காருக்குள் வைத்து வர்த்தகரை கொடூரமாக கொன்ற குற்றத்தில் இளைஞர்கள் கைது


குருணாகல் -  மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள்  எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மஹவ மற்றும் பிலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, வர்த்தகர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் காரை வழிமறித்து வர்த்தகரை காரில் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் 48 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வர்த்தகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் எரிக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. 

மரணித்தவர் குருநாகல் மில்லாவ பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தகர் ஆவார். 

No comments