வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் க.ஸ்ரீமோகனுக்கு சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் , வாழ்த்துரைகளை தொடர்ந்து, மாவட்ட செயலரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments