கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்பு மற்றும் ஹட்டன் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தியாவின் பெங்களூரிலிருந்து இண்டிகோ விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களது பயணப்பபைகளில் இருந்து வெளிநாட்டு விமான நிலையத்தின் வரி இல்லாத வணிக வளாகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்த 378 மதுபான போத்தல்களும், 132 கிலோகிராம் ஏலக்காயையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments