இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கு (1,000 பில்லியன்) மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த போது,
"இலங்கை சுங்கத்தின் வருவாய் இன்று ஒரு டிரில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.அரசாங்கத்தால் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கு 2,115 பில்லியன் ரூபாய் (2.115 டிரில்லியன்) ஆகும்.
தற்போது பெறப்பட்ட வருவாயின் அடிப்படையில், இந்த இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு சுங்கத் திணைக்களத்திற்கு உள்ளது.இலங்கை சுங்கத் திணைக்களத்தால் செயல்படுத்தப்பட்ட வருவாய் வசூல் முறையின் மறுசீரமைப்பு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
No comments