டேவிட் பிரீஸ் குழுமத்தின் "வடக்கு மேம்பாட்டு திட்டத்தின்" கீழ் வடமாகாணத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவேருக்கான "தளிர்" நிதி விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வாகனம் , தகவல் தொழிநுட்பம் , விவசாயம் , சுற்றுலா மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் வணிக முயற்சிகளை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டு , டேவிட் பிரீஸ் குழுமத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள " தளிர்" நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக சிறந்த முறையில் வணிக யோசனைகளை முன் வைத்த நான்கு பேருக்கு தலா 5 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டன.
அதேநேரம் , மூன்று சிறந்த முயற்சிகளுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கு மாற்றத்தக்க நிதி வழங்கப்பட்டுள்ளது,.
இந்த தொழில் முனைவோர் சுமார் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் டேவிட் பிரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரோஹன திசாநாயக்க பிரதம விருந்தினராகவும் , திட்ட ஆலோசகர் ஜெகன் அருளையா டேவிட் பிரீஸ் குழுமத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments