யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியின் குறுக்கே கடந்து சென்ற மாட்டை விலத்தி செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள நிலையில் , அதிவேகமே விபத்துக்கு காரணம் என தெரிவித்த சுன்னாகம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments