ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் விபத்து ஒண்றினை தொடர்ந்து கார் சாரதி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபரின் மனைவி கூறும் போது,
''என் கணவரை நெலும் பிளேஸிற்கு சென்ற போது, அந்த நபர்கள் என் கணவர் தான் விபத்தை ஏற்படுத்தியாக நினைத்தனர்.
என் கணவர் எதுவும் செய்யவில்லை. எந்த காரணமும் இல்லாமல் அவரை தாக்கினர். தலைக்கவசத்தால் அவரது தலையிலும் கையிலும் தாக்கியுள்ளனர்.. தாக்கியவர் பியூமியின் மகன் காவிங்க. அவருடன் சுமார் 20 பேர் இருந்தனர் என கூறினார்.
No comments