திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கி வந்த ஊர்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான கனேசலிங்கம் சிந்துஜன் (வயது 35) என்பவரையே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்
கடந்த 2023 ஆம் ஆண்டு தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சந்தாபுரம் என்ற இடத்தில் வைத்து பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு குறித்த நபருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர்
ஊர்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் பொலிஸ் விசாரணைகள் முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருந்ததாக பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் விசாரணைகளுக்கு அழைத்து அவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
No comments