Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறீதர் தியேட்டரில் மனித புதைகுழிகளா ? விசாரணைக்கு தாயார் என்கிறது ஈ.பி.டி.பி


செம்மணியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாமல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகளில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் அகழப்பட்டு வருகின்றன.

எமது பிரதேசத்தில் யுத்தம் நிலவிய காலத்த பல்வேறு மனிதப் புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இதில் பல்வேறு தரப்புக்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களும் இருக்கின்றன.

இவை தொடர்பாக  கடந்த காலங்களில் முழுமையான விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் யார் என்பது வெளிக் கொண்டு வரப்படாத நிலையில், செம்மணியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின் அகழ்வுப் பணிகளும், அங்கு மீட்கப்படுகின்ற மனித எச்சங்களும், புதைகுழி விவகாரத்தினை மீண்டும் பேசு பொருளாக மாற்றி இருக்கின்றது

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் எமது மக்களிடையே நிலவுகின்ற குழப்ப நிலையை மேலும் தூண்டிவிடுவதாக சில சுயலாப அரசியல் சக்திகளின் கருத்துகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.

எனவே, மேற்படி விடயம் தொடர்பில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை தொடர்ச்சியான முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

செம்மணி மாத்திரமல்ல, மன்னார், கொக்குளாய், துணுக்காய், மண்டை தீவு என்று எங்கெல்லாம், மனித புதைகுழிகள் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம், அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித எச்சங்கள் மீட்கப்படுமாயின் அவை எந்தக் காலப் பகுதியில் புதைக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டு சம்ந்தப்பட்டவர்கள் யார் என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

சிறீதர் தியேட்டரில் கூட மனித புதைகுழிகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகளை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு புதைகுழி விவகாரத்துடன்  ஈ.பி.டி.பி. தொடர்புபடுத்த விரும்புகின்றவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றோம். 

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் , மண்டைதீவிலே புதைகுழிகள்  இருப்பதாகவும் அது தொடர்பாக எமது செயலாளர் நாயகத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த, நீதி அமைச்சர், வெறுமனே செவி வழிச் செய்திகளை வைத்து கதை சொல்லுவதை விடுத்து, ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் விசாரிக்கிறோம் என்று சொல்லி இருக்கின்றார்.

எனவே சிறீதர் தியேட்டரில் புதைகுழி இருக்கின்றது ஈ.பி.டி.பி. மக்களை கொலை செய்து புதைத்தது சமூக ஊடகங்களில் கருத்துக்களை பரவ விடுகின்றவர்கள் உரிய முறையிலே முறைப்பாடுகளை பதிவு செய்யலாம். அதனை ஈ.பி.டி.பி. ஆவலுடன் எதிர்பார்க்கிறது. 

எனவே குறித்த விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றோம் என மேலும் தெரிவித்தார். 

No comments