கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்து கண்டி- ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதி ஹபரகெட்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் பள்ளத்தில் விழுந்து நேற்றைய தினம் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
விபத்தில் இரு பெண்கள், ஆண் என மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
No comments