Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சகோதரத்துவ தினம் என தெற்கில் இருந்து யாழ் வந்த இளையோர்


சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை பயணத்தை ஆரம்பித்து மாலை 3மணியளவில்  யாழ்.தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையம் மற்றும் அநுராதபுர புகையிரத நிலையம் ஆகையவற்றில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்கள், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை வழங்கி வைத்தனர்.

குறித்த குழுவுடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், இளைஞர் விவாகார பிரதி அமைச்சர் ஏரங்க குனசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு, அங்கு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாளைய தினம் வியாழக்கிழமை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன










No comments