நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் எனவும் , தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும்.
பெற்றுக்கொண்ட விண்ணப்பப்படிவங்களினை பூரணப்படுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும்.
நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலினை உதாசீனம் செய்து தங்களுடைய விடுதிகளை நல்லூர் பிரதேச சபையில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார்.
No comments