வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 'அவதானமாக இருக்கவும்' நிலையை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பம் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை, வெப்ப குறியீடு (Heat Index) குறிக்கிறது. இது, சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில், மனித உடல் எவ்வளவு வெப்பமாக உணரும் என்பதை மதிப்பிடுகிறது.
இது அதிகபட்ச வளிமண்டல வெப்பநிலை அல்ல என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments