Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

களுத்துறை பிரதேச சபையில் 12 மில்லியன் ரூபாய் மோசடி


களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும் முன்னாள் கடமை அதிகாரி ஒருவரும், ஓட்டுநரும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் கடமை அதிகாரி, களுத்துறை போமுவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணும், ஓட்டுநர் வாத்துவை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரும் ஆவர்.

களுத்துறை பிரதேச சபையின் செயலாளர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்களின் பகுப்பாய்வு மூலம், சம்பளக் கணக்குகளில் முறைகேடு செய்து பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் இருவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த மோசடி தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

No comments