Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹர்த்தலுக்கு ஆதரவில்லை - யாழ் . பல்கலை மாணவர் ஒன்றியம் பகிரங்கமாக அறிவிப்பு


தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு ஆதரவு வழங்க முடியாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. 

அது குறித்து ஊடகங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டள்ளதாவது, 

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும். அதன்பின்னரேயே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும்.

இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவுகோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை.

 தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது யாவர்க்கும் தெரிந்த விடயமே. ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம், அதற்கு துணை போகவும் மாட்டோம்.

மேலும் பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது 

No comments