இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் சாலைக்கு இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இன்றைய தினம் புதன்கிழமை கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் குறித்த இரண்டு பேருந்துகளும் கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட விருந்தினர்களால் நாடா வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.
சமீபத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் வாகன திருத்துநர்களால் பழுது பார்க்கப்பட்ட இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளே யாழ்ப்பாணம் – கொழும்பு சேவைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணை நாதன் இளங்குமரன், சிறீபவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபை துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments