யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணுவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை , பொலிஸ் அதிரடி படையினர் வழிமறித்து சோதனை செய்த போது, அவர்களின் உடைமையில் இருந்து 09 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து அவர்களை கைது செய்த பொலிஸ் அதிரடி படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவர்களை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
No comments