யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஷமிகள் தீ வைத்ததில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றாக தீயில் எரிந்துள்ளது.
கட்டைக்காடு ராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக, தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு கடும் பிராயத்தினத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள்.
அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments