களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவில் இணைக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகளின் இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
களுத்துறை, மத்துகம, பாணந்துறை, பயாகல, பேருவளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி அவர் மொத்தமாக ஹெரோயினை விநியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி ஆகியவை களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments