கிளிநொச்சி - பளை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த 04 பேர் கொண்ட கும்பல் நேற்றைய தினம் புதன்கிழமை உடைமைகள் அடித்து நொறுக்கி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பளை சோரன்பற்று பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்றைய தினம் புதன்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் தமது முகங்களை துணியினால் மறைத்துக்கொண்டு கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டு என்பவற்றுடன் வீட்டிற்குள் நுழைந்து உடமைகளை தாக்கி தீயிட்டுள்ளனர்.
இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கி தீ வைத்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம், பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments