கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பேராதெனிய பகுதியை சேர்ந்த தர்மசேன குரே (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி மாலை, அவர் தனது வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள கடையைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் வந்து, முந்தைய நாள் அவர் சொக்லெட் திருடிய சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்து முதியவரை தமது கடைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments