கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த விஜயரத்தினம் சரஸ்வதி (வயது 68) எனும் பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் மூதாட்டி தனிமையிலையே வசித்து வந்துள்ளார் அந்நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் மூதாட்டியை படுகொலை செய்து விட்டு , அவரது தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments