அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்களே , நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்து விட்டோம் என்பதற்காகவே அதற்கு எதிராக செயற்பட்டமை கவலையளிக்கிறது என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே,சிவஞானம் தெரிவித்துள்ளார்
யாழில். இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் .
மேலும் தெரிவிக்கையில்,
முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம்.
இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும்.
பலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் , மௌனம் காத்தமையும் எமக்கான ஆதரவாகவே நாம் கருத்துகிறோம். எனவே ஹர்த்தாலின் வெற்றியில் அவர்களுக்கும் பங்கு உண்டு.
இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
No comments