யாழ். வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மாமுனை கடற்கரைப் பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்படையினர் அதனை உடனடியாக பாதுகாப்பான முறையில் மீட்டனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டை கடற்படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments