திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை சந்தியில் வைத்து இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியை சேர்ந்த வினோத் (வயது 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அலஸ்தோட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வொன்றின்போது, மோதல் இடம்பெற்றுள்ளது.
அதன் போதே குறித்த இளைஞன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments