நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
இதேவேளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்றைய தினம் புதன்கிழமை அவரிடம் கையளிக்கப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று தொடர்புடைய கடிதத்தை வழங்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments