முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முத்துஐயன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தி இருந்தனர். அதனை அடுத்து இளைஞர்கள் தப்பியோடிய வேளை ஒரு இளைஞன் காணாமல் போன நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞனை இராணுவத்தினர் அடித்து கொலை செய்த பின்னர் குளத்தினுள் வீசியுள்ளனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments