யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025' நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவைபிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகமும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனும் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த புத்தக திருவிழா நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன. மாலை வேளைகளில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments