வத்தளை, ஹேக்கித்த, அல்விஸ்வத்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகத்துவாரம் மற்றும் வத்தளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்ததற்காக இரண்டு சந்தேக நபர்களும், கொலைக்கு உதவியதற்காக ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசிகளை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி, வத்தளை, ஹேக்கித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை குறித்த நபர் தங்கியிருந்த இரண்டு மாடி வீட்டிற்குள் இடம்பெற்றிருந்தது.
முகத்தை மூடியவாறு முச்சக்கர வண்டியில் பிரவேசித்த நான்கு பேர் அந்த நபரின் வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.
பொலிஸாரால் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், கொலை செய்யப்பட்டவர், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியவர் என்பது தெரியவந்துள்ளது.
No comments