Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

18ஆம் திகதி காலை முதல் மாலை 04 மணி வரையிலேயே ஹர்த்தால் - சி.வி.கே விளக்கம்


வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மத்தியில் ராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான பல தாக்குதல்கள்  நடைபெறுகின்றது.

இதை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கிலே மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற ராணுவத்தினரின் முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டின் நோக்கமாக நாங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருக்கின்றோம். ஹர்த்தால் சிலருக்கு அசௌரியமாக இருக்கலாம்.

ஆனால் நாங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுடைய எதிர்ப்பினை காட்டுவது மட்டுமல்லை.  ராணுவம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலக வேண்டும் வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஹர்த்தாலின் அடிப்படை நோக்கம்

எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகின்றோம். அநேகமாக பகல்வேளை என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது. 

குறிப்பாக மாலை நாலு மணியுடன் நிறைவு பெறும். எனவே ஹர்த்தால் வெற்றிகரமானதாக அமைய மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments