Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ரணிலுக்கு நீர்ச்சத்து குறைபாடு - வைத்தியசாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு


கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயிலர்கள் உட்பட எட்டு சிறை அதிகாரிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மருத்துவமனையைச் சுற்றி சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீரடைந்தவுடன் அவர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தீவிர வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதிக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதோடு ஏனைய பிற அறிகுறிகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நீதிமன்றத்தில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைப்பட்டதாலும், நீண்ட நேரம் தண்ணீர் அருந்தாமையினாலும் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். 

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தீவிர வைத்திய மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார். 

No comments