வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு , யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை விடுமாறு பிரதமர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
தேர் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் , மாணவர்கள் ஆசிரியர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள ஏதுவாக யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான , ப. சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமர் ஹரிணி அமரசூரியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும் , அதனை ஏற்று பிரதமர் , கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பணித்துள்ளதாக செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments