வவுனியா - முல்லைத்தீவு பிரதான வீதியில் நெடுங்கேணி பகுதியில் வீதியோரமாக இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த ச.ரவிக்குமார் (வயது 45 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்றயதினம் அவர் பணிமுடிந்து வெளியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் முல்லைத்தீவு பிரதானவீதியில் அமைந்துள்ள பாலத்தின் கரையில் அவரது சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
அவரது சடலதிற்கு அண்மையில் வாகனம் ஒன்றின் உதிரிப்பாகங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. அவரை வாகனம் ஒன்று மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் நெடுங்கேணி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments