Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி


வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க  ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க வடக்குக்கு  விஜயம் செய்துள்ளார் .

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த நிலையில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

அதன் போது, பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

இந்த  நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் இ.சந்திரசேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன், மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் , தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





No comments