35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான தெல்லிப்பழை பிரதேச மட்டத்திலான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றிருந்தன.
இறுதி போட்டிகளின் போது, பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் , சிறப்பு விருந்தினர்களாக, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய யாழ் மாவட்ட மேலதிக பணிப்பாளர் வினோதினி, கேமா அறக்கட்டளை நிறுவுனரும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான சீத்தா சிவசுப்பிரமணியம் , உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
தெல்லிப்பழை பிரதேச மட்டத்திலான 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வுகளின் புள்ளிகளின் அடிப்படையில் முதலாவது இடத்தினை கருகம்பனை இந்து இளைஞர் கழக அணியினரும் இரண்டாம் இடத்தை கலைச்செல்வி இளைஞர் கழக அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
No comments