Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் சீனோர் நிறுவன பணிகள் மீள ஆரம்பம்


யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் அதன் ஆரம்ப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில்  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 







No comments